×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.8 லட்சத்தில் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கினார்

காஞ்சிபுரம்: மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 478 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1,20,000 மதிப்பிலும், 2 பேருக்கு ரூ.1,41,000 மதிப்பிலும், ஒருவருக்கு ரூ.76,700 மதிப்பிலும் உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

மேலும் 4 பேருக்கு பல்வேறு தொழில் தொடங்க ரூ.49,868 மானியத்துடன் கூடிய வங்கி கடன்களும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் 3 விவசாயிகளுக்கு ரூ.4,16,000 மதிப்பிலான மானியத்துடன் கூடிய சுழல் கலப்பைகளும் என மொத்தம் ரூ.8.03 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.8 லட்சத்தில் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kalachelvi Mohan ,People's Grievance Meeting ,Collector ,Kalachelvi ,People's Reconciliation Center ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் கலெக்டர் நேரில் ஆய்வு